சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில், தோழமை கட்சிகளுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக,அதிமுக கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில், அறந்தாங்கி தொகுதியும் ஒன்று கூறப்படுகிறது.

இதைகுறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதி திமுகவினர், அறந்தாங்கி தொகுதியை காங்கிரசுக்கு விட்டு தர எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சிக்கு  கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் கோட்டையான இந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டு தர எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.