சென்னை

திமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ந்தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பொதுச்செயலாளராக பதவி ஏற்றார்.

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவில் உறுப்பினராக உள்ள அனைவரும் வாக்களித்து தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தற்காலிக பொதுச்செயலாளராக யாரையும் நியமிக்க முடியாது என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாருக்கு வி.கே.சசிகலா பிப்ரவரி 28ம் தேதிக்குள்  பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 17ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இந்த கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

அந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளார் சசிகலா. அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

கட்சியின் விதிகளுக்கு உட்பட்டே தான்  பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.