அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர்.

இதில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தவிர, F4 கார் பந்தயம் போன்று ஆடம்பர செலவுகள் செய்து மக்கள் பணத்தை திமுக அரசு வீண்டித்ததாகவும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக அரசு கபட நாடகமாடுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு விரைந்து மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.