
திருச்சி,
திருச்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகனுக்கு திருச்சி மகிளா கோர்ட்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இவரது மகன் ஆஷிக் மீரா(35). இவர் துர்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய தாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், இந்த வழக்கில் ஆஷிக் மீராவின் மாமியார் உட்பட 3 உறவினர்க ளுக்கு 7 வருட சிறை தண்டனையும் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
[youtube-feed feed=1]