சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்புவர்களுக்கு  டிசம்பர் 15 முதல் விருப்ப மனு வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்  2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து,  ஏப்ரல் அல்லது மே மாதம் வாக்கு பதிவு  நடைபெறும் என கூறப்படுகிறது.  இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி 4முனை போட்டி நிலவும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல கட்சிகள் விருப்பமனு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

இந்த நிலையில், அதிமுக சார்பில், தேரதலில் போட்டியிட விருப்புவர்களுக்கு  டிசம்பர் 15 முதல் விருப்ப மனு வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

“தமிழகம், புதுவை, கேரளா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி உறுப்பினர்கள், தலைமை அலுவலகத்தில் வருகின்ற 15.12.2025 – திங்கட் கிழமை முதல் 23.12.2025 – செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம்” என அறிவிக்கப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]