கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாலத்தீவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு தேடிச் சென்று மாலத்தீவு விளையாட்டுத்துறை அமைச்சர் விலையில்லா நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.
இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைச்சரின் இந்த செயல் தங்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தாக பொதுமக்கள் புகழாரம் சூட்டி உள்ளனர்.
தெற்காசிய நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் உள்ள ஒரு சொகுசு விடுதி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கடந்த 7-ந்தேதி கண்டறியப்பட்டது. இத்தாலி சுற்றுலா பயணி ஒருவர் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாலத்தீவில் உள்ள பெரும்பாலான சொகுசு விடுதிகள் மூடப்பட்டன. அங்கு இதுவரை 8 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.
மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக, இந்த இந்த தொற்றுநோய் ஊரடங்கின்போது, நீங்கள் செய்து வரும் வேலைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.