டெல்லி: இன்னும் 5 நாட்களில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திர தினவிழாவை சீர் குலைக்க சதி செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி தலைநகர் டெல்லியில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 15ஆம் தேதி நாடு முழுவதும் 78வது சுதந்திர நாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அன்று காலை தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும் மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் தேசிய கொடி ஏற்ற உள்ளனர். இதைத்தொடர்ந்து அணிவகுப்பு மரியாதைகள் நடைபெறும்.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்வராதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாதியின் பெயர் ரிஸ்வான் அலி. இவன், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தஎன்ற பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது. இவர் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த பயங்கரவாதி குறித்து தகவல் தெரிவித்தார் ரூ.3 லட்சம் பரிசு என ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) தேடப்பட்டு வந்த நிலையில், இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சீர் குலைக்க திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி ரிஸ்வான் அலி, டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் பாதியில் படிப்பை கைவிட்டவர் ரிஸ்வான் என்றும், இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு ஆள் சேர்ப்பது உள்ளிட்ட சில பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது தேரிய வந்துள்ளது. இவர் பதுங்கி இருந்த இடத்திலிருந்து வெடிபொருள்கள், டிரோன், முகாம் அமைப்பதற்கான பொருள்கள், எலாக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி மற்றும் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.