சென்னை:
மாநிலத்தையும் மண்ணையும் காக்கும் வேளாண் பட்ஜெட்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாநிலத்தையும் மண்ணையும் காக்கும் வேளாண் பட்ஜெட்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்றும், மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.