சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை  பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி நிதி ஒதுக்கீடு

உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.

எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். 

 சி, டி பிரிவு வாய்கால்களை தூர்வார ரூ.13.80 கோடி நிதி ஒதுக்கீடு.

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.  சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மின் மோட்டார் பம்பு செட்டுகள் ரூ.15000 வரை மானியமாக வழங்கப்படும்.

நீர் பற்றாக்குறையை போக்க ரூ.2.75 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். 

ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.

வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.  புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி ஒதுக்கப்படும். 

கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர ரூ.8 கோடி ஒதுக்கீடு

ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும் என

5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை
“நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை செய்யப்படும். இதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு” – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உழவர் நலத்துறை அமைச்சர்

ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு 2025-26ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை 10, 346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இணைய வர்த்தகம் மூலம் உழவர் சந்தை காய்கறிகள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற வேளாண் பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு. *புவிசார் குறியீட்டுடன் கூடிய பொருட்களின் சந்தை தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.20 கோடியில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். *

வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு. *

500 பேரை தேர்ந்தெடுத்து ரூ.50 லட்சம் செலவில் ஏற்றுமதியை ஊக்குவிக்க பயிற்சி அளிக்கப்படும்.

ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும். *

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேளாண் பணிகளில் இயந்திரமயமாக்கலை கொண்டு வர உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். இதற்காக ரூ.3.55 கோடி ஒதுக்கீடு.

காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு, வடிநிலப்பகுதிகளிலும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளிலும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

திறந்தவெளி பாசன கிணறுகளுக்கு சுற்றுசுவர் கட்ட மானியம் அளிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.

300 கிராமபுற இளைஞர்களுக்கு இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் பொருட்களை பதப்படுத்த, மதிப்பு கூட்டுதலுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.

சுவை தாளிப்பு பயிர்களுக்கான சிறப்பு திட்டத்திற்காக ரூ.11.47 கோடி நிதி ஒதுக்கீடு

பலா மேம்பாட்டு இயக்கத்திற்காக ரூ.3.75 லட்சம் நிதி ஒதுக்கீடு

புதிய பலா சாகுபடி உள்ளிட்ட திட்ட கூறுகளை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

வெண்ணை பழ உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு.

17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.

சிறிய வகை வேளாண் கருவிகளுக்கான மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு *சிறுகுறு உழவர்கள் பயனடையும் வகையில் மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும். * சிறுகுறு உழவர்கள் வேளாண் கருவிகள் வாங்க 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.

வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்

50 உழவர் சந்தைகளில் 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு

50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும். உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்.

4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு

4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நல்லூர் வரகு, நத்தம் புளி , காரைக்குடி கொய்யா , கப்பல்கட்டி முருங்கை, வேதாரண்யம் முல்லை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்.

நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.

மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.

சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம் அமைக்க ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு

வரும் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,427 கோடி நிதி ஒதுக்கீடு.

பாசனத்திற்கு கடைமடை வரை நீர் செல்ல ரூ.120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரின் டன் கொண்ட நெல் சேமிப்பு மையம் அமைக்கப்படும்.

நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.

மண்புழு உரம் தயாரிக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு. *

நெல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு ரூ.525 கோடி நிதி ஒதுக்கீடு. *

உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி நிதி ஒதுக்கீடு.

கால்நடை இனப்பெருக்க திறனை மேம்படுத்த ரூ.5.25 கோடி ஒதுக்கீடு.

5 ஆயிரம் பேருக்கு சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்க கடன் வழங்கப்படும்.

மீன் குஞ்சு உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படும். *

மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.