சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில்,  இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை  பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். இன்று வேளாண் பட்ஜெட்டை என்பதால்,  தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது என கூறியதுடன், விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளது.  உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன் எனதெரிவித்துள்ளார்.

5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும்.

உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்.

பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு.

பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு.

ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம்

இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடம். இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும். பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு. பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு.

சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை

2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் மல்லி செடி வளர்க்க ஊக்குவிப்பு

மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு.

வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு

பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு.

5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டம்

காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம்

ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும். நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு, 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கபடும்.

கரும்புக்கான ஊக்கத் தொகை உயர்வு

கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்வு. கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ. 297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம்
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

வேளாண் காடுகளை அமைக்க உழவர்கள் ஊக்குவிக்கபடுவர். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு செயல்படுத்தப்படும் வேளாண் தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம்
1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம்
ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம். தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும். நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு. நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.

வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்
சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.

இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு.

வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிப்பு

500 ஏக்கரில் வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிக்கப்படும். மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கீடு. மின் மேட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு.