
நாகை:
நீரின்றி பயிர் கருகியதால், மனமுடைந்த மேலும் ஒரு விவசாயி இன்று தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகம் முழுதும் நீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், விரக்தி அடைந்த விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாக உள்ளாது. வாழ்வாதாரம் இ்ல்லையே என்ற அதிர்ச்சியிலும் பல விவசாயிகள் இறந்தனர்.
இந்த நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆதனூரை சேர்ந்த சுந்தரேசன் என்ற விவசாயி, தற்கொலை செய்துகொண்டார். நீர் இன்றி, பயிர்கள் கருகியதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel