சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் 30 குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயதுமூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. அ ந்தியாவில் அரிசித் தட்டுப்பாட்டை போக்குவதற்காக பல்வேறு உத்திகளை அறிமுகப்படுத்தி யவர், ‘பசுமைப் புரட்சி’யின் சிற்பி என என எம்.எஸ்.சுவாமிநாதன் அழைக்கப்பட்டார். பசுமை புரட்சியின் தந்தை எனவும் எம்.எஸ். சுவாமிநாதன் அழைக்கப்பட்ட இவர் அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி, நெல் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்தவராவார். ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றார்.
இவர் வயது மூப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை ( 2023, செப் 28ந்) காலை 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதையடுத்து “உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று முற்பகல் வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு 30 குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதை வழங்கப்பட்டு, நல்லக்கடக்கம் செய்யப்பட்டது.