க்ரா

னைவியின் மொபைலை பிடுங்கி மேசஜை பார்க்க வாட்ஸ்அப் ஓப்பன் செய்த கணவரை அரிவாளால் அவர் மனைவி தாக்கினார்.

நேத்ரபால் சிங்க் – நீது சிங்க் இருவரும் தம்பதிகள்.

தற்போது சில மாதங்களாக பிரிந்து வாழும் இவர்களின் பிரிவுக்கு சரியான காரணம் தெரியவில்லை.

நேத்ரபால் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வுக்காக வந்திருந்த நீது வாட்ஸ்அப்பில் சாட் செய்துக் கொண்டிருந்தார்.

நேத்ரா, நீதுவிடம் அவரது மொபைலைக் கேட்டு இருக்கிறார்.

தர மறுத்த நீது, அங்கிருந்து எழுந்து செல்ல முயல, அவர் கையிலிருந்த மொபைலை வெடுக் என பிடுங்கி வாட்ஸ்அப் ஓபன் செய்தார் நேத்ரா.

கோபம் கொண்ட நீது பக்கத்தில் இருந்த அரிவாளைக் கொண்டு கணவரை ஓங்கி வெட்டி இருக்கிறார்.

பலத்த காயத்துடன் மயங்கி விழுந்தார் நேத்ரா.

அவர் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

நீதுவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் வந்த விளைவுதான் இது எனவும் நேத்ராவின் தந்தை கூறி இருக்கிறார்.

இதுவரை இதுபற்றி எந்த புகாரும் போலிசில் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது.

கணவர்களே ஜாக்கிரதை!!