சென்னை:
இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்மீது நேற்று அழுகிய முட்டை, செருப்புகள் வீசப்பட்டதை தொடர்ந்து வன்முறை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே! என்று தெரிவித்து உள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட கமல், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்மீது செருப்பு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன.
இதன் காரணமாக 2 நாட்கள் தங்களது தனது பிரசாரத்தை ரத்து செய்திருந்த கமல், நேற்று மீண்டும் அரவக்குறிச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். கரூரில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் மீது நடந்த செருப்பு வீச்சு தாக்குதலால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சினேகன் மற்றும் தொண்டர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட தளவா பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிகழ்வை தொடர்ந்து ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும் அதைக்கண்டு மயங்கி விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும் எனவும் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் பிரசார கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்கு
கமல்ஹாசன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.