சென்னை:

வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போதும் அரசியல் கட்சியின்  முகவர்கள் உனிருக்க அனுமதிக்க வேண்டும் என்று  தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  வாக்கு எண்ணும் மையங்களில்  முகவர்களை அனுமதிக்க வேண்டும், ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது முகவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவிடம், டி.ஆர்.பாலு நேரில் கோரிக்கை மனு கொடுத்தார்.

அதில்,  வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடனும், நம்பகத் தன்மையுடனும் நடத்த வேண்டும் எனவும்,  விவிபேட் இயந்திங்களின் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் உடன் இருக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.