வாஷிங்டன்

ந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். ஏற்கனவே சுனிதா இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோருடன் சென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இருவரும் அட்லஸ் வி ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர். இதனால் உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் சென்ற முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்தார்.

கடந்த 13 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் திரும்ப இருந்த பயணம் திடீரென 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள்,

”சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தின் 5 இடங்களில் ஹீலியம் வாயு கசிவது கண்டறியப்பட்டுள்ளது.  அதன் 28 உந்து என்ஜின்களில் 14 என்ஜின்களில் பிரச்னை உள்ளதால் சுனிதா வில்லியம்ஸும்  பட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது”

எனத் தெரிவித்துள்ளனர்,