கரூர்:
அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் மீது மீண்டும் செருப்பு வீசப்பட்டது.
காந்தியை கொலை செய்த நாதுரான் கோட்ஸே தான் முதல் இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் பேசியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
அவர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் வேலாயுதம்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது.
அப்போது ஒருவர் கமல்ஹாசன் மீது செருப்பை வீசினார். அங்கிருந்து மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் அவரை தாக்கினர்.
படுகாயமடைந்த அந்த நபரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தின் போது போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. பெண் காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற கமல்ஹாசன் மீது மதுரை அருகே இளைஞர் ஒருவர் செருப்பு வீசியது குறிப்பிடத்தக்கது.