மதுரை
தமிழக அளுநர் ஆர் என் ரவி கலந்துக் கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடையில் நிறுத்தப்பட்டதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
நேற்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியா அமைப்பு சார்பில், இளம் தொழில் முனைவோருக்காக மதுரை – அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் நடந்த கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கியதும் முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய போதிலும், தடுமாற்றம் அடைந்த மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட தொடங்கினர். எனவே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தேசிய கீதம் பாடிய பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல்திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.