💥 தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
💥 அகிலேஷின் தலைவர் பதவி பறிப்பு- பதிலடியாக டம்மியான அமைச்சர் சிவ்பால் யாதவ். உத்தரப்பிரதேசத்தின் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சி தலைவராக அகிலேஷ் யாதவின் பதவி பறிக்கப்பட்டு அவரது சித்தப்பா சிவ்பால் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் 2-வது இடத்தில் இருந்த சிவ்பால் டம்மியாக்கப்பட்டுள்ளார்.
💥குற்றப் பரம்பரையை பாலாவால் மட்டுமே சர்வதேசத் திரைப்படமாக எடுக்க முடியும்: குற்றப்பரம்பரை திரைப்படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் சுழன்று கொண்டிருந்தாலும் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பிரச்சினை குறித்த தமது கருத்தை தெளிவாக முன் வைத்தார்.
💥தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர். தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக காங்., தலைவராக இருந்த இளங்கோவன், சட்டசபை தேர்தலில் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், தலைமை இல்லாமல், 4 மாதங்களாக கட்சி செயல்பட்டு வந்தது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர். புதிய தலைவர் பதவிக்கு சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் என பலரது பெயர்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக டில்லியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி அறிவித்துள்ளார்.தன்னை தலைவராக நியமித்ததற்கு சோனியாவுக்கும், ராகுலுக்கும் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார்.
💥பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 91 ஆயிரம் பேர் இன்று அதிமுகவில் இணைந்தனர். அவர்களை பெரும் மகிழ்ச்சியோடு முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார்.
💥பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு தளர்வு. காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. தமிழகத்தை சேர்ந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். தற்பொழுது மாநிலத்தில் அமைதி திரும்பி வருவதால், தமிழக பேருந்துகள் கர்நாடக – தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் 3 கிலோ மீட்டர் நடக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
💥அரசு ஆஸ்பத்திரியில் இறந்ததாக சான்றிதழ் கொடுத்த குழந்தைக்கு உயிர் வந்தது. ஆந்திரா அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு இறந்ததாக சான்றிதழ் கொடுத்த சில மணி நேரத்திலேயே குழந்தைக்கு உயிர் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
💥வெளிநாடுகளிலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு பாராட்டு: முதல்வர் பேச்சு. சென்னை: அம்மா உணவகம் உட்பட பல தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்த சில வெளிநாடுகளும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
💥சென்னையில் மாநகரப் பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி. சென்னை மயிலாப்பூரில் மாநகரப் பேருந்து மோதி பள்ளி மாணவர் உயிரிழந்தார். பள்ளி மாணவர் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து மீது பொதுமக்கள் கல்வீசுி தாக்குதல் நடத்தினர்.
💥 நேதாஜியின் அகால மரணத்தை உறுதிப்படுத்தியது ஜப்பான்! நேதாஜி சபாஷ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி தைபையில் ஒரு விமான விபத்தில் அகால மரணமடைந்ததை ஜப்பான் அரசு உறுதிப்படுத்தி வெளியிட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன.
💥வள்ளிவிலாஸ் நகைக்கடையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை. கடலூரில் வள்ளிவிலாஸ் நகைக்கடையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வள்ளி விலாஸ் உரிமையாளர் பாலுவிடம் சென்னையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
💥சீனா-வியட்நாம் உறவு வலுப்படும்: இருநாட்டுத் தலைவர்கள் நம்பிக்கை! ஏற்கனவே நல்ல நண்பர்களாக இருக்கும் இவ்விரு நாடுகளுக்கும் இருந்த உறவு வலுப்பட்டுள்ளதாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
💥காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்
💥கர்நாடகா போராட்டம் : 2 நாட்களில் ரூ.25,000 கோடி இழப்பு. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள், கலவரங்கள் வெடித்தது. 2 நாட்களாக நடந்த போராட்டத்தால் போக்குவரத்து மற்றும் தொழில்கள் முடங்கின. இதனால் ரூ.22,000 கோடி முதல் 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசம் தெரிவித்துள்ளது.
💥அருணாச்சலில் சம்பவம்: அருணாச்சலப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர், தலையில் குண்டுகள் பாய்ந்து தனது சொந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
💥காவிரியால் ரஜினிக்கு தர்மசங்கடம்!: வருந்தும் பாக்யராஜ். கர்நாடகாவில் இருந்து வந்து தமிழகத்தில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு, காவிரி பிரச்சினை தர்மசங்கடமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்
💥16ம் தேதி முழு அடைப்புக்கு பாஜக ஆதரவு தர பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை. காவிரிப் பிரச்சனைக்காக 16ம் தேதி நடக்கும் முழு அடைப்புக்கு பாஜக ஆதரவு தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
💥126 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, 126 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
💥டெல்லியில் சிக்குன் குனியா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொசுக்கடியால் பரவி வரும் சிக்குன் குனியா நோய்க்கு டெல்லியில் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நோய்க்கு ஏற்கனவே 4 பேர் பலியான நிலையில் மதுராவை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
💥காவிரியில் தண்ணீர் திறந்ததை அடுத்து 83 அடியை எட்டிய மேட்டூர் அணை. காவிரியில் தண்ணீர் திறந்ததை அடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் கடந்த ஒரு வர காலமாக வந்துக்கொண்டு இருக்கிறது. வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் நீர் மட்டம் உயர தொடங்கியுள்ளது.
💥விழுப்புரம் திமுக நகர செயலாளர் செல்வராஜ் இன்று அதிகாலை வாக்கிங் சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆள் நடமாட்டம் குறைவான ரயில்வே பழைய குடியிருப்புப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார்.
💥 பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ஜனவரி 13ம் தேதிக்கான ரயில் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.
💥 நத்தம்.விஸ்வநாதன் வீட்டில் 3 நாட்களாக தொடர் சோதனை. வரி எய்ப்பு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் நத்தம்.விஸ்வநாதன் வீட்டில் முன்று நாட்களாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை செய்து வருகிறார்கள். தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரிடம் விசாரணையும் நடத்தப்படுகிறது.
💥தமிழர்கள் மீது பழி சுமத்தும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை நீக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வன்முறைக்கு தமிழர்கள்தான் காரணம் என அமைச்சர் பேசியதற்கு கண்டனம்.
💥 பாராலிம்பிக் போட்டியில் மீண்டும் ஒரு இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை! பாராலிம்பிக் ஆடவர் பிரிவு ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில், ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா, 63.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். இதுவரை 2 தங்கம் உட்பட 4 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.
💥நதியை சிவப்பு நிறமாக மாற்றிய தொழிற்சாலை . நோரில்ஸ்க் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ரசாயன மாசுக்கள் ரஷ்யாவின் டால்டிகன் நதியை சிவப்பு நிறமாக மாற்றியது.நதியை மாசுபடுத்தியதற்கு அந்நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.இதன் விளைவுகளை விரைவாக மதிப்பிட முடியாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
💥மர்ம காய்ச்சல்: திருச்சி அருகே 3 பேர் பலி. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது, கத்திக்காரன்பட்டி கிராமம்; 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 10 நாட்களுக்கு முன், சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தொடர் காய்ச்சல் இருந்ததால், அனைவரும், திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, சில நாட்களுக்கு முன், 56 70 வயதுடைய இரண்டு பெண்கள் இறந்தனர். நேற்று முன்தினம், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, 27 வயது வாலிபர், நேற்று அதிகாலை இறந்தார். இவர், எல்.ஐ.சி., ஏஜன்டாகவும், பா.ஜ., ஒன்றிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
💥 வேலூர் மாவட்டம், குடியாத்தம். குடியாத்தம் அடுத்த இராமாலை கிராமத்தில் ஊராட்சியில் சாலை மற்றும் தெரு விளக்கு உட்பட எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை எனவும் நிற்வாகத்தில் அதிக அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் உள்ளதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை எனவும் கூறி இராமலை பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 50, க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
💥திருத்தணி அருகே சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த ஒருவர் பலி, 8பேர் படுகாயம். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் உருண்டு பள்ளத்தில் விழுந்து விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி, 8பேர் படுகாயம். காயம் அடைவார்களை திருத்தணி அரசு மருத்துவமைனையில் சிகிச்சைக்காக அனுமதி .. திருப்பதியில் சாமி கும்பிட்டுவிட்டு சென்னைக்கு வீடு திரும்பும்போது கார் விபத்தில் சிக்கியது
💥வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிப்பதால், தமிழகத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
💥நெல்லை மாவட்டம் விகேபுரத்தில் +2 மாணவி ஜென்ஸி தூக்கு போட்டு தற்கொலை. மாணவிகளுக்கு நேற்று நடந்த சிறப்பு வகுப்பிற்கு தொலைபேசி கொண்டு சென்றதால் ஆசிரியை திட்டியதால் வீட்டில் சென்று தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.விகேபுரம் காவல்துறையினர் விசாரணை.
💥திருச்சி சாருபாலா தொண்டைமான், பிரபல நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்தனர்
💥கர்நாடக அரசை கண்டித்து நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்பாட்டம்.
💥 ஆசிரியர் தகுதி தேர்வில் பிற்படுத்தபட்டோர், தாழ்த்தப்பட்டோர் , மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டோருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 04 க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
💥 பெரம்பலூரில் உள்ள விஜயா வங்கியை முற்றுகையிட முயற்சி செய்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து விஜயா வங்கிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
💥 தீபாவளிக்கு நெரிசலுக்கு தீர்வு- சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு
💥 கர்நாடகா, தமிழகத்தில் கலவரம்.. தலையிடக் கோரி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
💥 அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் வங்கித் தலைவர்கள் அருந்ததி பட்டாச்சார்யா, சாந்தா கொச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
💥 மதுரை திமுக கவுன்சிலர் ஜீவானந்தம், நாகமலைபுதுக்கோட்டை பஞ். தலைவர் ஜெயகுமார் உட்பட 2500 பேர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஏற்பாட்டின்பேரில் அதிமுகவில் ஜெயல்லிதா முன்னிலையில் இணைந்தார்கள்.
💥 பெங்களூரு கலவரத்தைக் காட்டக் கூடாது.. டிவி சானல்களுக்கு தடை போட்ட ஹைதராபாத் போலீஸ்
💥 ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்துவிட்டால், அரசுக்கு லாபப் பங்கு (டிவிடெண்ட்) வழங்க வேண்டிய அவசியம் இருக்காது
💥 இந்திய சுற்றுப் பயணம் குறித்து நேபாள பிரதமர் முக்கிய ஆலோசனை நேபாள பிரதமர் பிரசண்டா நாளை இந்தியா வருகிறார். இதையொட்டி நேற்று அவர் நேபா ளத்தின் முன்னாள் பிரதமர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.🚔
💥 ரியாவில் போர் நிறுத்தம் அமல் சிரியாவில் அரசுப் படைகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.🚔
💥 பெங்களூரு கலவரம்: அமேசான், பிளிப்கார்ட், ஐடி நிறுவனங்கள் பாதிப்பு
💥 கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து வத்தலக்குண்டில் தமிழக விவசாய கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம்.
💥 முக்கியசெய்தி: பஞ்சாப் மாநில சட்டசபையில் பஞ்சாப் அமைச்சர் மீது காலணி வீச்சு.