சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தத்திற்கு பிறகு, தங்களது பெயர்களை சேர்க்க இதுவரை 39ஆயிரம் பேர் படிவங்களை பெற்று சென்றுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்மூலம், முறையான படிவங்கள் நிரப்பப்படாத வகையில், 97 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தன. நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களது பெயர்கள் மீண்டும் இணைக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18ம் தேதி வரை தெரிவிக்கலாம் இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்க வேண்டும். அவற்றை அதிகாரிகள் பரிசீலனை செய்து ஆவணங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டால், உங்களது பெயர் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளில் முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதரவியாக, அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.
இதற்கான பணியில் மாநிலம் முழுவதும் தி.மு.க.விற்கு 65 ஆயிரத்து 210, அ.தி.மு.க.விற்கு 63 ஆயிரத்து 703, பா.ஜ.க.விற்கு 54 ஆயிரத்து 258, காங்கிரசிற்கு 27 ஆயிரத்து 158 தேர்தல் முகவர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு ஆதரவாக, சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் ஆறு படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். அந்த வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]