சண்டிகர்:
கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளதால், பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதமாக மாநில அரசு அறிவித்து உள்ளது.
டெல்லி தப்லிகி முஸ்லிம் மாநாட்டுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அதில் கலந்துகொண்டவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கும் வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், பல மாநிலங்களில் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் ஒடிசா மாநில அரசு, ஊரடங்கை வரும் 30ந்தேதி வரை நீட்டிப்பதாகவும், கல்வி நிறுவனங்கள் மே 14ந்தேதி வரை மூடப்படுவதாகவும் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.
நேற்று செய்தியளார்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்று தெளிவுபடுத்திய நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.