டில்லி:

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடர்ந்து ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் இந்திய கல்வி நிறுவனங்களில் பயில ஒரு லட்சம் வெளிநாட்டு மாணவர்களை வரவழைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதன் மூலம் 25 நாடுகளை மையமாக கொண்டு ரூ. 300 கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக அண்டை நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா கண்டத்தை குறிவைக்கப்பட்டுள்ளது. அரச கணக்கெடுப்பின் படி தற்போது 35 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இந்திய கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.

இந்தியாவில் உயர் தரமான மற்றும் சவுகர்யமான கட்டணத்தில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது என்பதை வெளி உலகிற்கு எடுத்து காட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் செயல்படுத்தப்படவுள்ளது. ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட 115 உயர் கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளது.

இந்த திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த முடிவு மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.