கோலாலம்பூர்: ஹாங்காங்கிற்கு பிறகு, மலேசியா அரசு இந்தியர்கள் நுழைவதை தடை செய்துள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் பதிவாகி வருவதால், இந்த வார தொடக்கத்தில், மலேசியா இந்தியர்கள் காலவரையின்றி நுழைவதற்கு தடை விதித்தது. இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்கும் 2வது நாடு இதுவாகும்.

இது ஆசியாவிற்கு செல்லும் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம், ஹாங்காங் ஏர் இந்தியா விமானங்களுக்கு இரண்டு வார திடீர் தடை விதித்திருந்தது, இது இன்றுவரை தொடர்கிறது.

மலேசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நீண்டகால விசா வைத்திருப்பவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், மாணவர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது.

இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்களுக்கும் மலேசியா தடை விதித்துள்ளது. தற்போதைய நிலவரங்களின் படி, செப்டம்பர் மாதத்திற்கான ஏர் இந்தியா வந்தே பாரத் விமான அட்டவணையானது, டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், ஷாங்காய், மணிலா, புனோம் பென், நரிதா மற்றும் ஹனோய் போன்ற ஆசியாவிற்கான விமானங்களை பட்டியலிட்டுள்ளது.

முன்னதாக, ஆகஸ்டு 14ம் தேதி இயக்கப்பட்ட டெல்லி-ஹாங்காங் விமானத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம், ஹாங்காங் ஏர் இந்தியா விமானங்களுக்கு இரண்டு வாரங்கள் தடை விதித்தது.