டில்லி

நிதி அமைச்சரின் இன்றைய அறிவிப்புக்குப் பிறகு  இந்தியப் பங்குகளின் மதிப்பு ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் தற்போது கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.   இந்த சரிவைத் தடுத்து நிறுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   அவற்றில் ஒன்றாக இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார்.  அதன்படி நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி விகிதத்தை மொத்தமாக 25.17% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விகித மாற்றம் கடந்த ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   இது முதலீட்டாளர்கள் நன்மைக்காகவும் முதலீட்டை அதிகரிக்கவும் அரசு அளித்துள்ள சலுகை ஆகும்.    அத்துடன் பங்குகள் விற்பனை மற்றும் திரும்ப வாங்கும் போது அதற்கான வரியில் இருந்து அரசு விலக்கு அளித்துள்ளது..

இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குகளின் விலை ஏறத் தொடங்கி உள்ளது.   இதனால் மும்பை பங்கு வரத்தகச் சந்தையில் பங்குகளின் மதிப்பு ரூ.1.408 லட்சம் கோடியில் இருந்து 2.111 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.   இந்த பங்குகளில் முக்கிய நிறுவனங்களான என் டி பி சி, டாடா, மாருதி, எச் டி எஃப் சி வங்கி, எஸ் வங்கி ஆகியவை உள்ளன.

இந்த பங்குகளின் மதிப்பு குறைந்த பட்சமாக 5.7% வரை அதிகரித்துள்ளது.   அத்துடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 காசுகள் அதிகரித்து தற்போது ரூ.70.68 ஆக உள்ளது.