எடின்பெர்க்:
உலகிலேயே ஸ்காட்லாந்து போலீசார் தான் அதிக திறன் படைத்தவர்கள் என்ற ஒரு பெயர் உண்டு. இத்தகைய பெருமை பெற்ற ஸ்காட்லாந்து போலீசாருக்கு ஒரு ‘புலி’ தண்ணி காட்டி பெரும் காமெடியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டின் அபேர்தின்ஷிரே வடகிழக்கு கோட்ட போலீசாருக்கு சில தினங்களுக்கு முன்பு மாலை நேரம் அதிர்ச்சியூட்டும் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தனது பண்ணைக்குள் பெரிய புலி ஒன்று நுழைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த போலீசார் ஆயுதப் படையுடன் அந்த பண்ணை அமைந்துள்ள ஹட்டன் பகுதிக்கு சென்றனர். செல்லும் வழியில் வன உயிரியல் பூங்காவுக்கு தொடர்பு கொண்டு புலி எதுவும் தப்பிச் சென்றுவிட்டதாக என்று கேட்டுக் கொண்டே சென்றனர்.
அந்த இடத்துக்கு சென்று போலீசாரும் புலி உட்கார்ந்திருப்பதை பார்த்து இருந்தனர். அப்பே இரவாக விட்டது. ஆனால் புலி ஆடாமல், அசையாமல் உட்கார்ந்திருந்தது. இதை கண்டு சந்தேகமடைந்த போலீசார் 45 நிமிடம் கழித்து அருகில் சென்று பார்த்தபோது அது பெரிய பொம்பை புலி என்பது தெரிந்தவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் போலீசார் வெளிட்டனர். இது பேஸ்புக்கில் பெரும் காமெடியை ஏற்ப டுத்தியது. இது வரை ஆயிரகணக்கானோர் இதை பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘அந்த நபர் வேண்டுமென்றே கூறவில்லை. அவரும் அச்சமடைந்து தான் புகார் தெரிவித்துள்ளார். காவல் துறைக்கு வரும் அனைத்து அழைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சம்பவம் உண்மையா? பொய்யா? என்பதை முடிந்த வரை அந்த இடத்துக்கு விரைந்து சென்று உறுதிபடுத்தப்படும். உயிரியல் பூங்காவில் புலி எதுவும் தப்பிச் சென்றுள்ளதா? என்பதை உறுதிபடுத்துவதற்காகவே அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது’’ என்றனர்.