சென்னை

னவரி 5 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம்,  ”ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் தமிழகத்தில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது மரபு ஆகும். அவ்வகையில், வரும் 2022ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் வருகிற ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது.

சட்டப்பேரவை கூட்டம் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக கலைவாணர் அரங்கில் நடந்தது. தற்போது தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து விட்டதால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்.   ஏற்கனவே தலைமைச்செயலக வளாகத்தில் சட்டமன்ற பேரவை நடைபெறும் இடத்தில் பேரவைக் கூட்டம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, பொது நிதிநிலை. பிறகு மானியக்கோரிக்கையும் இங்கேயே நடைபெறும்.” எனத் தெரிவித்துள்ளார்.