17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

நவம்பர் 12 ம் தேதி ஏற்பட்ட இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் உயிருடன் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்திய ராணுவம் மற்றும் விமான படையினர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் உதவியுடன் தேவையான எந்திரங்களைக் கொண்டு முயற்சி மேற்கொண்டனர்.

இந்த முயற்சி பல்வேறு கட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில் 17 நாட்களுக்குப் பிறகு 41 தொழிலாளர்களும் இன்று உயிருடன் மீட்கப்பட்டனர்.