காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் கால பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளாமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை (மதியம் 1மணி நிலவரம்) பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் , இந்தியா, கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில், செப்டம்பர் 1, 2025 அன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி (USGS), இந்த நிலநடுக்கம் 6.3 அளவைக் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி சுமார் 00:47:41 மணிக்கு ஏற்பட்டது, அதன் மையப்பகுதி அட்சரேகை 34.50N மற்றும் தீர்க்கரேகை 70.81E இல் 160 கி.மீ ஆழத்தில் அமைந்ததிருந்ததாக க தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, இதன் காரணமாக, குறைந்தது 600 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், 1300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. . மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க புவியயல் ஆய்வு மையம் தகவலின்படி, நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஜலாலாபாத்திற்கு கிழக்கே 27 கி.மீ தூரத்தில் ஏற்பட்டது. ஜலாலாபாத் நகரத்தில் சுமார் 2, 00,000 மக்கள் வசிக்கின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனென்றால், தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மாறுபட வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ஷரஃபத் ஜமான் கூறுகையில், “உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நிலநடுக்கம் நடந்த பகுதிக்குச் செல்வது கடினமாக இருப்பதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார். குனார் மாகாணத் தகவல் தலைவர் நஜிபுல்லா ஹனிஃப் கூறுகையில், “நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொலைதூர மாவட்டங்களில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும்” என்றார்.