போலிப் பொருட்களின் விளம்பரத்தில் தோன்றினால் தண்டனைக்கு வழிவகுக்கும் சட்டத்தின் முன்வரைவை இதற்கென அமைக்கப்பட்ட பாராளுமன்றக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.
மத்திய அமைச்சரவை இதனை ஏற்றால், விசாரிக்காமலும், உண்மைத் தன்மை இல்லாத விளம்பரங்களில் தோன்றும் நடிகர்கள் , விளையாட்டு வீரர்கள் உட்பட பிரபலங்கள் இனிமேல் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
சமீப நாட்களில், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளம்பரப் படுத்தும் பொருட்களின் தரம் அவர்கள் விளம்பரத்தில் தோன்றி கூறுவதைவிட மிக மோசமாக இருப்பது நிதர்சனம். அவர்களை நம்பி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த நஷ்டத்தை அனுபவிக்கின்றனர். ஆனால் அந்த முக்கியஸ்தர்கள் எந்த குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து விலம்பரங்களில் தோன்றி நடித்து வருவது மக்களை ஒருவகையில் ஏமாற்றும் செயல் என்று நுகர்வோர் குற்றம் சாட்டி வந்தனர்.
இது குறித்து முடிவெடுக்க ஒரு பாராளுமன்றக் கமிட்டி அமைக்கப்பட்டது.
அந்தக் கமிட்டி தற்பொழுது தம்முடையப் பரிந்துரையை அரசிடம் வழங்கியுள்ளது.
அதில்,
முதல் முறை தவறிழைக்கும் முக்கியஸ்தர்கள் களுக்கு 10 லட்சம் அபராதமும், இரண்டாண்டு தண்டனையும்.
இரண்டாம் முறை தவறு செய்தால் 50 லட்சம் வரை அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அளிக்க சட்ட இயற்ற பரிந்துரைச் செய்துள்ளது.
சமீபத்தில் அமித்தாப் பட்சன் விளம்பரம் செய்த மேகி நூடுல்ஸ் பாதுக்காப்பற்றது என தடை செய்யப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விளம்பரத் தூதுவராய் உள்ள ஒரு தனியார் பில்டர் நிறுவனம் தோனி விளம்பரத்தில் கூறியது போல் அடிப்படை வசதிகள் இல்லாது, அங்கு குடியிருப்போர் கடந்த ஞாயிற்றுக் கிழமை ட்விட்டர் சமூக வலைதளத்தில் தோனியைக் காய்ச்சி எடுத்து விட்டனர். அதனைத் தொடர்ந்து தோனி அந்த நிறுவனம் தாம் உறுதியளித்த அனைத்து வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டியது அதன் கடமை ” என கருத்து தெரிவித்தார்.
அந்தக் கம்பெனியின் உரிமையாளர் கூறுகையில், “மக்கள் சிறிய விசயத்தை ஊதிப் பெரிதாக்கியுள்ளனர் என்றும் பெரும்பாலான வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டு விட்டன. மிக சிறிய அளவிலான வேலைகளே பாக்கி உள்ளன ” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
பாராளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ள சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வருமா ?