டெல்லி

பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 96 வயதான எல்.கே.அத்வானிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறை மற்றும் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அத்வானிக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சினைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advani, Delhi, AIIMS Hospital, discharge,