டில்லி

திமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது பதவிஏற்பின் போது ஜெய்ஹிந்த் என கோஷம் இட்டுள்ளார்.

இன்று மக்களவை கூட்டத்தில் அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் பதவி ஏற்பு நடந்தது. தமிழகத்தில் அதிமுக சார்பில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தமிழக துணை முதல்வரின் மகனான ரவீந்திர நாத் குமார் அந்த ஒரே உறுப்பினர் ஆவார். அவர் இன்று மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.

இன்று பதவி ஏற்ற அனைவரும் பதவி ஏற்பு முடிந்ததும் தமிழ் வாழ்க என கோஷமிட்டு விட்டு அமர்ந்தனர். பாஜக உறுப்பினர்கள் ஜெய்ஹிந்த் என கோஷமிட்டனர். அதிமுக உறுப்பினரான ரவிந்திரநாத் குமார் தனது பதவி எற்பு முடிந்ததும் பாஜக உறுப்பினர்களைப் போல் ஜெய் ஹிந்த் என குரல் எழுப்பினார்.

ரவீந்திரநாத் குமார் இவ்வாறு கோஷமிட்டதற்கு பாஜக உறுப்பினர்கள் கை தட்டி ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மற்ற தமிழக உறுப்பினர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் தமிழ் வாழ்க என குரல் எழுப்பும் போது அதிமுக உறுப்பினர் ஜெய்ஹிந்த் என கோஷமிட்டது அவர் பாஜக உறுப்பினராக தம்மை கருதி உள்ளதாக விமர்சிக்கப் பட்டுள்ளது.