சென்னை: கலைஞர் கருணாநிதியை  கைது செய்தபோது, அவரத  சொந்த மகனே (ஸ்டாலின்(  அவரை விட்டுவிட்டு ஓடி விட்டார்’  என தவெக பொதுக்குழுவில் பேசிய  ஆதவ் அர்ஜுனா  கடுமையாக விமர்சித்தார். அதுபோல மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவது தமிழ்நாட்டில் மட்டுமே என்று நிர்மல்குமார் விமர்சித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) இரண்டாவது சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று (நவம்பர் 5, 2025) மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதி  அரங்கில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்ட அனைவரும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி சுமார் 2000க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில்,  10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டணி ஆட்சி என்று கூறி வந்த விஜய், கூட்டணிக்கு தானே தலைவன் என்றும், தானே முதல்வர் வேட்பாளர் என்றும் உறுதி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அதிமுக, பாஜக போன்ற கூட்டணி கட்சிகளின் ஆசை நிராசையாகி உள்ளது.

பொதுக்குழு வில்  கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து,

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் தலைவர் விஜய் முன்மொழியப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்-க்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், எதிரிகள் ஒன்றை புரிந்துகொள்ளவில்லை; யாரும் தவெக தலைவர் விஜய்யை எளிமையாக அசைத்துப் பார்க்க முடியாது; ஏனென்றால், அவர் மக்களின் நம்பிக்கை, தாய்க்குலங்களின் நம்பிக்கை, தமிழ் மண்ணின் நம்பிக்கை” என கூறினார்.

தொடர்ந்து பேசிய தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “பொதுச் செயலாளர் பொதுச்செயலாளர் ஓடிவிட்டார், நிர்மல் குமார் ஓடிவிட்டார், என்று கூறுகிறார்கள். யார் ஓடியது, உங்கள் அப்பாவை கைது செய்யும் போது நீங்கள் ஓடினீர்களே அப்படிய ஓடினோம் நாங்கள்? கலைஞர் கைது செய்யப்படும் போது யார் ஓடினார்? தி.மு.க0வுக்கு வரலாறு தெரியுமா? கலைஞர் கைது செய்யப்படும் போது சொந்த மகன் ஓடினார். தி.மு.க வரலாறு பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்” என்று ஆவேசமாகப் பேசினார்.

தொடர்ந்து பேசியவர், தைரியம் இருந்தா விஜய் மேல கை வைங்க என ஆட்சியாளர்களுக்கு சவால் விட்டவர், 2026 தேர்தலில் இளைஞர்கள் புரட்சி நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், அண்ணா கொள்கையுடன் தி.மு.க-வைத் தொடங்கினார். கலைஞர் சமூகநீதி, குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு ஊழல் அமைச்சர்களை உருவாக்கினார். ஸ்டாலின் மகணை முதலமைச்சராக்க வேண்டும் என்று செயல்படுகிறார். காந்தியை மட்டும்தான் பின் தொடர்கிறார்கள்.” என்று கூறின் ரூபாய் நோட்டைக் காட்டினார்.

தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டத்திற்கு நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் வருகிறார்கள் என்று சொல்ல முடியுமே தவிர மக்கள் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எங்களால் எப்படி கணிக்க முடியும்? இதெல்லாம் உளவுத்துறைக்கு தெரியாதா? இது தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்  என்றும்  ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து பேசிய  கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் , தமிழக மக்களை 100 சதவீதம் தலைவர் விஜய் அரசியல் படுத்தியிருக்கிறார் , “தமிழக மக்களிடம் ஒன்று சொல்கிறேன் நம்முடைய பக்கத்து மாநிலம் கேரளாவில் அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்க மாட்டார்கள் தெரியுமா? கம்ப்யூட்டர் பில் கொடுப்பார்கள், மீதி சில்லறை கொடுத்து விடுவார்கள். அதைவிட ஒரு முக்கியமான விஷயம் கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை.” என்று பேசியதுடன், த.வெ.கவில் தவறு செய்யும் நபர்களை அடுத்த நிமிடமே தலைவர் தூக்கி எறிந்து விடுவார்  என்றார்.

தலைவர்கள் பேசியதும், இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.மேலும், கட்சி நடவடிக்கைகள் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவைகள் முடிந்ததும், கட்சி  தலைவர் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார்.  அவருடைய பேச்சை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு செல்லும் வகையில் நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.