பிரபல பாடகி அடீல் சொந்த விஷயங்களை அதிகம் வெளியில் பகிர்வதில்லை. இருப்பினும் தனது வியத்தகு எடை இழப்பை பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை அவரால்.
தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக தன்னுடைய உடல் மெலிந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பாடகி அடீல்.
அந்த புகைப்படத்தில் அடீல் ஒரு வீட்டிற்கு வெளியே கருப்பு, தொடை நீள ஆடை அணிந்து, ஃப்ரீ ஹேரில், கருப்பு குதிகால் ஹீல்ஸில் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறார்.
https://www.instagram.com/p/B_1VGc5AsoZ/
புகைப்படத்துடன் ” அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி , இந்த இக்கட்டான சூழலில் அனைவரும் பாதுகாப்பை உள்ளீர்கள் என நம்புறேன்”
“உயிரைப் பணயம் வைத்து எங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்! நீங்கள் உண்மையிலேயே எங்கள் தேவதைகள்.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் 2020 ஆம் ஆண்டுக்கு நன்றி என கூறியுள்ளார் .