
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின்(பகலிரவு) முதல் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 233 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
துவக்க வீரர் பிரித்விஷா டக்அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 17 ரன்களை மட்டுமே எடுக்க, புஜாரா எடுத்தது 43 ரன்கள் மட்டுமே. பின்னர், கேப்டன் கோலியும், துணை கேப்டன் ரஹானேயும் சற்று நிலைத்து நின்று ஆடினர்.
இந்நேரத்தில், 74 ரன்கள் எடுத்திருந்த விராத் கோலி, எதிர்பாராதவிதமாக ரன்அவுட் ஆனார். அதன்பிறகு சிறிதுநேரத்திலேயே 42 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவும் ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுமன் விஹாரி 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, தற்போது களத்தில் விருத்திமான் சஹாவும், அஸ்வினும் உள்ளனர். சஹா 9 ரன்களும், அஸ்வின் 15 ரன்களும் எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், கம்மின்ஸ் மற்றும் லயன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.