சென்னை
கூட்ட நேரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் = மதுரை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கோடை விடுமுறை கூட்ட நெரிசலைக் குறைக்க பின்வரும் ரெயில்களில் ஏப்ரல் 26 வரை தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்
அதன்படி மதுரை – தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 22624) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
தாம்பரம் – மதுரை செல்லும் (வண்டி எண்: 22623) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்
எனத் தெரிவிக்கப்படுள்ளது.