பஞ்சாப்,
திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற நடன விருந்தில், போதை காரணமாக நடன பெண்மணியை சுட்டு தள்ளினார் வாலிபர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் மவுர் பகுதியில் உள்ளூர் கமிஷன் ஏஜென்ட் ஒருவரின் மகன் திருமணம் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.
அப்போது திருமண நிகழ்ச்சியில் பெண் டான்சரின் நடன நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது மணமகனின் நண்பர்கள் அதிக போதையில் இருந்துள்ளனர்.

அவர்களின் ஒருவன் போதை தலைக்கேறியதும் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த 22 வயதான குல்விந்தர் கவுர் உடன் இணைந்து ஆட முயற்சி செய்துள்ளார். அப்போது சிலர் மேடை ஏறக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபர் பெண் டான்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார், நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் மீது ஐபிசி செக்சன் 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறி உள்ளனர்.
https://youtu.be/McOClnf0A3o
Patrikai.com official YouTube Channel