மும்பை

நேற்று மும்பை நகரில் திடீரென வீசிய புழுதிப் புயல்ல் ஒரு ராட்ச்த விளம்பர்ப்பலகை விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பை நகரை திடீரென புழுதிப்புயல் வீசியதுது. நேற்று காலை வானிலை ஆய்வு மையம் சுமார் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எச்சரித்தபடி மாலை 4 மணி அளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டன. பலத்த காற்று வீசத் தொடங்கியது.

சுமார் 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் புழுதி பறந்து இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது. காற்று, புழுதி, மழையும் சேர்ந்து தாக்கியதால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தூசி படலமாக காட்சியளித்தது. இதன் பாதிப்பு மும்பையை அடுத்த தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்தது.

வாகன ஓட்டிகள் தெளிவற்ற வானிலையால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போய்ள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று ஒதுங்கினர். ஒரு சில இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மும்பை லால்பாக் பாலத்தில் சென்ற கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. மேலும் மேக்வாடி நாக்கா பகுதியில் தென்னை மரம் ஒன்று ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார்.

மும்பை வடலா – அன்டாப்ஹில் சாலையில் உள்ள பர்கத் அலி நாக்கா பகுதியில் உலோகத்தால் அமைக்கப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்த கோபுரம் (பார்க்கிங் டவர்) இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 50 கார்கள் சேதமடைந்ததாக தெரிகிறது. அங்கு அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.

மும்பை காட்கோபர், கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் கிரவுண்ட் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டு இருந்த ராட்சத விளம்பர பலகை பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது. சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த பதாகை இரும்பு சாரங்களுடன் விழுந்ததால் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்து வீடுகள் நொறுங்கின. இந்த ராட்சத பலகைக்குள் பலர் சிக்கி கொண்டனர்.

உடனடிய தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து. இடிபாடுகளுக்குள் சிக்கிய பலரை மீட்டனர். சுமார் 70 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ராஜாவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் இரவில் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.