அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 10 முதல் 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள் முறையே 15 மற்றும் 10 சதவீதம் சரிந்து ரூ.2,398.25 ஆகவும், ரூ.1,160.70 ஆகவும் உள்ளது.
இவ்விரு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பலத்த அடியை அடுத்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டதை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் வர்த்தகத்தில் நுழையும் போது மேலும் சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
அதானி குழுமத்திற்கு சொந்தமான 11 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் 20 சதவீதம் குறைந்து ரூ.697.25 ஆகவும், அதானி பவர் 14 சதவீதம் சரிந்து ரூ.450 ஆகவும் இருந்தது. அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 18 சதவீதம் சரிந்து ரூ.1,156க்கு வர்த்தகமாகி வருகிறது.
அதானி டோட்டல் கேஸ், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், என்டிடிவி மற்றும் சங்கி இண்டஸ்ட்ரீஸ் 14.50 சதவீதம் குறைந்து ரூ.574 ஆகவும், 11.30 சதவீதம் குறைந்து ரூ.1,938 ஆகவும், 14.70 சதவீதம் ரூ.468 ஆகவும், 9.33 சதவீதம் ரூ.153 மற்றும் 6.5.95 சதவீதமாகவும் இருந்தது. அதானி வில்மர் லோயர் சர்க்யூட் 10 சதவீதத்தை ரூ.294.90-க்கு எட்டியது.
அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை சோலார் மின்சார திட்டத்திற்கு பயன்படுத்தாமல் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறி மோசடி செய்ததாக அதானி உள்ளிட்ட 8 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த முதலீட்டை பெற்றுத் தந்த அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜிக்யூஜி-யின் பங்குகளும் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பங்கு சந்தையில் சரிவை சந்தித்துள்ளது.
அதானி மீது அமெரிக்காவில் வழக்கு… நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை…