தராபாத்

பிரபல திரைப்பட நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

தென்னிந்தியத் திரை உலகின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்கு பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

பிறகு விஜயசாந்தி பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறி 2020 ஆம் ஆண்டு மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார். தற்போதைய, தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே அவர் பாஜகவில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த சில நாட்களாகச் செய்திகள் பரவி வந்தன. நேற்று, நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.