சென்னை: ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வும், நடிகையுமானா ரோஜா இன்று, முதல்வர் ஸ்டாலினை தனது கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் சந்தித்து பேசினார். அப்போது, சால்வை ஒன்றை பரிசாக வழங்கினார்.
நடிகை ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் சேர்ந்து நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென இன்று தலைமைச்செயலகம் வந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வழங்குவது உள்பட சில கோரிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து, பட்டுத் துணியில் நெய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் உருவப்படம் அடங்கிய சால்வை ஒன்றையும் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார்.