தன்னை பற்றியும், மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும் இழிவான கருத்தை பதிவிட்ட பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திரைப்பட நடிகையும், மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகினி ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு கிஷோர் கே சாமி, மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் தன்னை பற்றி இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டாதாகவும் இதனால் கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே கிஷோர் கே சாமி முன்னாள் முதல்வர்கள் குறித்தும், பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விசிக துணை பொதுசெயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.