கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரான ஆண்டனி தட்டிலுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தானும், ஆண்டனியும் 15 ஆண்டுகளாக ஒன்றாக இருப்பதாகவும் அவருடனான பந்தம் தொடரும் என்றும் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆண்டனி தட்டிலுடனான தனது காதலை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தி இருக்கும் அதே நேரத்தில் அவருடன் தனது பந்தம் தொடரப்போவதாக அறிவித்திருப்பது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அதேவேளையில், கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் இருவருக்கும் திருமணம் செய்ய கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
34 வயதாகவும் ஆண்டனி தட்டில் கீர்த்தி சுரேஷை விட இரண்டு வயது மூத்தவர் என்றும் அவர் கீர்த்தி சுரேசுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்றும் கூறப்படுகிறது.
துபாயில் தொழில் செய்துவந்த ஆண்டனி தட்டில் தற்போது கேரளாவின் கொச்சியில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.