சென்னை

ன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி சென்னையில் பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஆயினும் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார்.

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து கஸ்தூரி தலைமறைவாகவே கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அவரை கைது செய்வதற்காக தனிப்படைகல் அமைக்கப்பட்டு  தமிழகம்ம்ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது

நேற்று  நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இருப்பதாக சென்னை தனிப்படை காவல்துறையினருக்கு தக்அவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர்

ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் தற்போது சென்னை அழைத்து வந்துள்ளனர். அவரிடம் சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடதியது. அவரிடம் வாக்குமூலம் பெற்று அதன் பின் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டுள்ள்ர்,