இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து அவர் சென்னையில் இருந்து மாயமானதை அடுத்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி அளித்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘நான் ஓடவும் இல்லை… தலைமறைவாகவும் இல்லை’ நீதிமன்ற உத்தரவுக்கு முன் நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ