சென்னை: முன் ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். நாளை விசாரிக் கிறார்

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்.  தனிப் படை போலீசார்  அவரை கைது செய்ய தேடி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிராமணர்கள் சங்கம் சார்லபில்,  இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து,  தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கோரினார்.

இருந்தாலும், அவர்மீது தெலுங்கு அமைப்பு என கூறி பல இடங்களில் சிலர் காவல்நிலையத்தில் புகார் கூறி வருகின்றனர். , அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகை கஸ்தூரி 4 சட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன்பேரில் கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீஸார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீஸார்  சென்றனர். அப்போது நடிகை கஸ்தூரி தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி கைது செய்யப்படுவார் என தகவல்கள் பரவின. அவர் தலைமறைவான நிலையில்,  அவரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது.

இந்த பரபரப்புக்கு இடையே,  நடிகை கஸ்தூரி தரப்பில்,   முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில்,  தவறுக்கு தான்  வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, தன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  சிலர்  உள்நோக்கத்தோடு தன்மீது  புகார் கொடுத்துள்ளதாகவும், அதன்பேரிலேயே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  அதனால் தனக்கு முன்ஜாமின் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.