சிம்லா

மாசலப்பிரதேசத்தில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அமைச்சர் அனுராக் தாக்குர் வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று காலை 8 மணி முதல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இடில் இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் பா.ஜ.க. 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். கங்கனாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 74,755 ஆகும்.

அம்மாநிலத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்  போட்டியிட்டு 6,07,068 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அனுராக் தாக்குரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சட்பால் ரைசாடா 4,24,711 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,82,357 ஆகும்.