சென்னை: திடீர் மாரடைப்பு காரணமாக மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணிக்கு மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சின்ன கலைவாணர் என அன்போடு அழைக்கப்படும் நகைச்சுவைக நடிகர் விவேக் (வயது 59) மாரடைப்பு காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை காலமானார்.
அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான ரசிகர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விவேக்கின் உடல் இன்று மாலை 4 மணி வரைக்கும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்பின்னர், மாலை 5 மணிக்கு மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் விவேக் உடல் தகனம் செய்யப்படுகிறது.