சென்னை: காமெடி நடிகர் விவேக் சென்னை  ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் இன்று காலை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் பாதிப்பு அடுத்த 2 வாரங்களுக்கு தீவிரமாக இருக்கும் என்றும்,  மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுகொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தடுப்பூசி திருவிழாக்களையும் நடத்தி வருகிறது.  ஆனால், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வ நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பு ஊசி போட்டுகொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் சேர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அப்போது  விவேக் கூறுகையில், ” அனைவரும் கொரோனா தடுப்பூ செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. கொரோனா தடுப்பூசிதான் மக்கள் உயிரை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் உயிரிழப்பு என்பது ஏற்படாது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக்கவசம் அணிய வேண்டும்” என்றும் கூறினார்.