சென்னை
விஜய் நடத்தும் தவெக மாநாட்டில் அழைப்பு இல்லாவிடாலும் செல்ல உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு விழவில் நடிகர் விஷால் கலந்து கொண்ட போது,
”ஒரு வாக்காளராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்வேன். அழைப்பு விடுக்காமலே தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு செல்வேன். இப்போ இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, அவர் என்ன நல்லது செய்யப் போகிறார் என்று தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன். மாநாட்டிற்கு அழைப்பு தேவையில்லை. மாநாட்டிற்கு எங்கேயாவது ஒரு ஓரத்தில் நின்று அவர் என்ன பேசப்போகிறார் என்று பார்ப்பேன்.
புது அரசியல்வாதி வருகிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும். அதைக் கேட்க வேண்டும். அதை ஏன் தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும். நேரடியாகவே சென்று பார்த்தால் நல்லது தான். அதற்காக மாநாட்டிற்கு செல்வேன்.
அவருடைய கருத்து, அவர் என்ன மக்களுக்கு கூறப் போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே
மாநாட்டுக்கு செல்வேன். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் கூற முடியாது. முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும். விஜய் முதல் அடி வைக்கட்டும், அவர் என்ன செய்யப் போகிறார் ? அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் கட்சியில் இணைவேனா என்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நானும் ஒரு அரசியல்வாதி தான். சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள்
தான்.”
எனத் தெரிவித்துள்ளார்.