நெய்வேலி: வேனில் ஏறி நின்ற நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்தார். அப்போது கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்துவருகிறது.சில நாட்களுக்கு முன்பு, அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை நடத்திய விசாரணையின் போது என்எல்சியில் படப்பிடிப்பு நடந்து வருவது வெளியுலகுக்கு தெரிந்தது.
விசாரணை முடிந்து அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பின்னர் ரசிகர்கள் முன்பு திடீரென தோன்றி கை அசைத்தார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவ தடியடி நடத்தப்பட்டது.
இந் நிலையில், படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்து ரசிகர்கள் முன்பு தோன்றினார். வேன் ஒன்றின் மீது ஏறிய விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
சுற்றியிருந்த ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு இடையே தமது செல்போனை கையில் எடுத்த விஜய், ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அவரது இந்த செய்கையை கண்ட ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
நடிகர் விஜய்யை காண என்எல்சி முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்து, செல்பி எடுத்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தள்ளமுள்ளு காரணமாக போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
[youtube https://www.youtube.com/watch?v=LKKK-71QP9E]
[youtube-feed feed=1]